மன்னார்குடி அருகே மின் கசிவினால் இரண்டு கூரை வீடுகள் எரிந்து வீட்டில் இருந்த முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 May 2026

மன்னார்குடி அருகே மின் கசிவினால் இரண்டு கூரை வீடுகள் எரிந்து வீட்டில் இருந்த முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது..


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள புழுதிகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணியளவில் அப்பகுதியில் வசித்து முருகையன் என்பவரின் வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள கூறை பகுதி எறிய தொடங்கியது . அதனைத் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக அருகில் உள்ள தனிக்கொடி என்பவர் வீட்டின் மீதும் தீ பரவியது இதனால் முருகையன் வீடு முற்றிலுமாக எரிந்தது. மேலும் தீயை அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதன்பிறகு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் இருந்த தீயை அணைத்தனர்.மேலும் இதுகுறித்து விக்கிரபாண்டியம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாக வீடு தீப்பற்றி எரிந்ததாக தெரிவித்தனர். மேலும் வீட்டில் உள்ளிருந்த முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad